இந்தியா

நீரவ் மோடி குடும்பத்தினர் சொத்து முடக்கம் : சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சிங்கப்பூரில் உள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினர்களின் வங்கி கணக்கை முடக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீரவ் மோடி குடும்பத்தினர் சொத்து முடக்கம் : சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். நீரவ் மோடி மீதான மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 19-ம் தேதி அவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நீரவ் மோடிக்கு எதிரான உலகளாவிய ஒடுக்குமுறையின் அடிப்படையில் சிங்கப்பூரில் உள்ள அவரது உறவினர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதாக அந்நாட்டு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி மேத்தா மற்றும் மாயங்க் மேத்தா ஆகியோரின் 4 வங்கிக் கணக்குகள் மொத்தம் ரூபாய் 44 கோடி மதிப்புடைய வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று நீரவ் மோடிக்கு சொந்தமான 5 வங்கிக் கணக்குகளை சுவிஸ் அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories