இந்தியா

அமேசான் பே, கூகுள் பே நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கெடு!

இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை, இந்தியாவிலே சேமித்து வைக்க வேண்டும் என அமேசான் பே, கூகுள் பே நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.

அமேசான் பே, கூகுள் பே நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கெடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை, கூகுள் பே, அமேசான் போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமித்து வருகின்றன.

இத்தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், இதுபோன்ற முக்கியத் தகவல்களை இந்தியாவில் இருக்கும் சர்வர்களில் சேமித்து வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் தான் இந்திய பணபறிமாற்ற தரவுகளை சேகரித்து வருகின்றன.

இந்நிலையில், 24 மணி நேரத்திற்கு தரவுகள் சேமிப்பு விவகாரத்தில் கூகுள் பே மற்றும் அமேசான் பே முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.

banner

Related Stories

Related Stories