இந்தியா

கனிமொழி,திருமாவளவன், சு.வெங்கடேசன் எம்.பி.,க்கள் தமிழில் பதவியேற்பு- அதிர்ந்த நாடாளுமன்றம்

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 222 பேர் மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர்.

கனிமொழி,திருமாவளவன், சு.வெங்கடேசன் எம்.பி.,க்கள் தமிழில் பதவியேற்பு- அதிர்ந்த நாடாளுமன்றம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17வது மக்களவையின் 2ம் நாள் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் கூடுகிறது. 2வது நாளாக இன்று எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில், தமிழகம், புதுவை, தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 222 பேர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், நாளை சபாநாயகருக்கான தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் பா.ஜ.க நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் யார் என்பதற்கான ஆலோசனைக் கூட்டமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, ஜெயராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 37 எம்.பி.,க்கள் தமிழில் பதவியேற்றனர். சமஸ்கிருதம், ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் அவையில், தமிழக எம்.பி.,க்கள் தமிழில் பதவியேற்றது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories