இந்தியா

இன்று கூடுகிறது 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்!

நாட்டின் 17வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நாளை (ஜூன் 17) தொடங்குகிறது.

இன்று கூடுகிறது 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில் நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். அவரது தலைமையின் கீழ் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 17ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மக்களவை கூடுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக அவைத் தலைவர் வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வு மக்களவைக் கூட்டத் தொடரின் முதல் 2 நாட்கள் நடைபெறும்.

பின்னர், ஜூன் 19ம் தேதி, புதிய மக்களவைக்கான சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜூன் 20ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடங்கிட கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.

ஜூலை 26ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் மொத்தம் 38 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜூலை 5ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

banner

Related Stories

Related Stories