இந்தியா

உலகில் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு : இந்தியாவின் இடம் என்ன தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செயல்பட்டுவரும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 2019-ம் ஆண்டுக்காக உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

உலகில் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு : இந்தியாவின் இடம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உலக நாடுகளில் அமைதியாக உள்ள நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள், நாட்டில் நிலவும் சமூக பாதுகாப்பு, உள்நாட்டு பிரச்னை, சர்வதேச பிரச்னைகளின் போது உள்ள நிலைப்பாடு, ராணுவத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் படி, 2019ம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து உலகிலேயே அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த நாடு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.

உலகில் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு : இந்தியாவின் இடம் என்ன தெரியுமா?

163 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 2018-ம் ஆண்டு 137-வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 4 இடங்கள் பின்தங்கி 141-வது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 72-வது இடத்திலும், நேபாளம் 76-வது இடத்திலும், வங்கதேசம் 101-வது இடத்திலும் உள்ளன. பூடான் 15-வது இடத்திலும் பாகிஸ்தான் 153-வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து, ஜப்பான் 9-வது இடத்திலும், அமெரிக்கா 128-வது இடத்திலும், ரஷ்யா 154-வது இடத்திலும் உள்ளது.

பட்டியலில் 163-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி குறைவான நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா, தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது.

banner

Related Stories

Related Stories