இந்தியா

பா.ஜ.க தலைவர்களைக் கைது செய்ததற்காக பெண் போலீஸ் அதிகாரி பணி இடமாற்றம்! (வீடியோ)

போலீஸ் அதிகாரி மிரட்டியதாக 5 பா.ஜ.க தலைவர்களைக் கைது செய்ததற்காக பெண் போலீஸ் அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க தலைவர்களைக் கைது செய்ததற்காக பெண் போலீஸ் அதிகாரி பணி இடமாற்றம்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசத்தின் துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரி சிரேஷ்டா தாக்கூர். அம்மாநில அரசாங்கம் அவரை திடீர் பணி இடமாற்றம் செய்துள்ளது.

உத்தர பிரதேசம் சானா பகுதியில் ஜூன் 22ம் தேதி, பெண் போலீஸ் அதிகாரி சிரேஷ்டா மற்றும் இன்னொரு போலீஸ், வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வேகமாக வாகனத்தை ஓட்டிவந்த நபர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர். இதையடுத்து, வாகனத்தில் வந்தவர்கள் பெண் காவலரை மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் பெண் போலீஸ் அதிகாரியை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க தொண்டர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்காக அந்த பகுதி பா.ஜ.க தலைவர்கள் பெண் காவல்துறை அதிகாரியின் மேல் கோபத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும் அவர் எதற்கும் பணியவில்லை என தெரிகிறது .

இந்த நிகழ்வினை அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பா.ஜ.க-வினருக்கு எதிராக பெண் போலீஸ் அதிகாரி சிரேஷ்டா பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு இந்த தகவல் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் நடந்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு அந்த பெண் போலீஸ் அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் நேபாளத்தின் எல்லையில் உள்ள பரைக் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க தலைவர்களைக் கைது செய்ததற்காக பெண் போலீஸ் அதிகாரி பணி இடமாற்றம்! (வீடியோ)

இதுகுறித்து சிரேஷ்டா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "தீக்கொழுந்திற்கென்று ஒரு வீடு இல்லை. அது எங்கிருந்தாலும் ஒளியைப் பரப்பும். என்னை நேபாள நாட்டின் எல்லைக்கருகில் இருக்கும் பரைக் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிட்டனர். இதை என் பணிக்குக் கிடைத்த பரிசாக ஏற்றுக் கொள்கிறேன். பரைக்கிற்கு உங்களை அழைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories