இந்தியா

பருவமழை எதிரொலி: கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழக கேரள எல்லையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

பருவமழை எதிரொலி: கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே இறுதி அல்லது ஜூன் முதல் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 6ம் தேதிதான் பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில் ஜூன் 8ம் தேதி கேரளாவில் தொடங்கியது.

ஒருவார தாமதத்திற்கு பின்னர் கேரளாவில் நேற்று தொடங்கிய பருவமழை, முதல் நாளிலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனையடுத்து, கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.

மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories