இந்தியா

புழுதிப் புயலுக்கு 26 பேர் பலி : உத்தர பிரதேசத்தில் சோகம்!

இரண்டு நாட்களாகப் புழுதிப் புயலின் தாக்கம் உத்தர பிரதேசத்திலும் நேபாளத்திலும் அதிகமாகக் காணப்பட்டது. இதன் கோரத் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகியுள்ளனர்.

புழுதிப் புயலுக்கு 26 பேர் பலி : உத்தர பிரதேசத்தில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக கடுமையான புழுதிப் புயல் வீசி வருகிறது. புழுதிப் புயலுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாகப் புழுதிப் புயலின் தாக்கம் உத்தர பிரதேசத்திலும் நேபாளத்திலும் அதிகமாகக் காணப்பட்டது. இதன் கோரத் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும், கால்நடைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பலரின் கால்நடைகள் உயிரிழந்ததுடன், 20-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

புழுதிப் புயல் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்திலும் புழுதிப்புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் 17 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories