இந்தியா

அரசு அதிகாரிகளை செருப்பால் அடிக்க வேண்டும் : பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு !

அரசு அதிகாரிகளை செருப்பால் அடிக்க வேண்டும் என உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்ரத்தன் குஷ்வஹா பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

கடந்த 4ம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராம்ரத்தன் குஷ்வஹா, "அரசு அதிகாரிகள் உங்களை(பா.ஜ.க-வினர்) மதிக்கவில்லை என்றால், உங்கள் காலணிகளை கொண்டு அவர்களைத் தாக்கவும். பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு" எனக் கூறியுள்ளார். இவரது பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராம்ரத்தன் குஷ்வஹாவின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் ராம் கிஷோர் சாஹோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் " ராம்ரத்தன் இந்த கருத்துக்களை உணர்ச்சிமிகுதியில் பேசியிருப்பார். இந்த கருத்தின் மூலம் யாராவது காயம் அடைந்தால், குஷ்வஹா தான் பேசியதை எண்ணி வருந்துவார் " என்று அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories