இந்தியா

பாலியல் வன்புணர்வு குற்றவாளியை சிறையில் சென்று சந்தித்த பா.ஜ.க எம்.பி!

பாஜக எம்.எல்.ஏ-வும், 16 வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் சிபிஐ-யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவருமான குல்தீப் சிங் செங்காரை சிறைக்குச் சென்று சந்தித்திருக்கிறார் சாக்‌ஷி மகாராஜ் எம்.பி.

பாலியல் வன்புணர்வு குற்றவாளியை சிறையில் சென்று சந்தித்த பா.ஜ.க எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தின் உண்ணவ் தொகுதி பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மகாராஜ் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர். மக்களவைத் தேர்தலின்போது, வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால் சாபம் விடுவேன் என மிரட்டி பரபரப்பைக் கிளப்பியவர். ஆனால், தேர்தல் ஆணையம் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேறு கதை.

சாக்‌ஷி மகாராஜ், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருக்கும் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அசுர குலத்தின் இரண்யகஷ்யப் வழிவந்தவர் என விமர்சித்தது கண்டனத்திற்குள்ளானது.

இந்நிலையில், பங்கார்மாவ் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், 16 வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் சிபிஐ-யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவருமான குல்தீப் சிங் செங்காரை சிறைக்குச் சென்று சந்தித்திருக்கிறார் சாக்‌ஷி மகாராஜ்.

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் குல்தீப்பைச் சந்தித்து தேர்தல் வெற்றிக்காக நன்றி சொல்ல வந்ததாகத் தெரிவித்துள்ளார் சாக்‌ஷி மகாராஜ். தேர்தல் பிரசாரத்தின்போதே சாக்‌ஷி மகாராஜ், குல்தீப் சிங் செங்காரின் வீட்டுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்புணர்வு குற்றவாளியை சிறையில் சென்று சந்தித்த பா.ஜ.க எம்.பி!

குல்தீப் சிங் செங்காரால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் தந்தையைக் கொன்ற வழக்கில் குல்தீப் சிங் செங்காரின் சகோததர் ஜெய் தீப் சிங்கும் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொடூர குற்றவாளிகளுடன் பா.ஜ.க எம்.பி நட்பு பாராட்டுவதை எதிர்க்கட்சியினர் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories