இந்தியா

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலை என்ன? - மூவர் குழு ஆய்வு

தென்மேற்கு பருவமழைத் தொடங்க ஓரிரு நாட்கள் இருக்கும் நிலையில், முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட உச்ச நீதிமன்ற மூவர் குழு, அணை பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது. 

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலை என்ன? - மூவர் குழு ஆய்வு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முல்லை பெரியாறு அணையை ஆய்வு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு, நேற்று அணையை ஆய்வு செய்தது. அவர்களுடன் தமிழக, கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ல் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முல்லை பெரியாறு அணையில் உள்ள 13 ஷட்டர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனை பாதுகாப்பாக உள்ளதாக மூவர் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூவர் குழு, முல்லை பெரியாறு அணையையும், அதன் அருகில் உள்ள பேபி அணையையும் பாதுகாக்க தமிழக கேரள அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories