இந்தியா

ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கில் உயரும் வங்கி மோசடிகள்: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

2018-19ம் நிதியாண்டில் மட்டும் வங்கிகளில் 71,500 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கில் உயரும் வங்கி மோசடிகள்: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், ஆர்.டி. ஐ. மூலம் வங்கி மோசடி குறித்து ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளின் அடிப்படையில் அண்மைக்காலங்கள் வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் குறித்து விவரங்களை அளித்துள்ளது.

அதில், 2018-19ம் நிதியாண்டில் 6,800 வங்கிகளின் மூலம் 71,500 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மோசடிகள் 2017-18ம் நிதியாண்டை விட 73% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கில் உயரும் வங்கி மோசடிகள்: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

2015-16ம் நிதியாண்டில் 4,693 வங்கி மோசடியில் 18,699 கோடி ஊழல் செய்யப்பட்டதும், 2016-17ல் 5,076 வங்கி மோசடியில் 23,934 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 11 ஆண்டுகளில் 53,334 வங்கி மோசடிகளில் 2 லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது போன்ற மோசடிகள் குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories