இந்தியா

அக்னி நட்சத்திரம் முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில்... வட மாநிலங்களின் கதி என்ன?

கோடைகாலம் முடிந்தும் தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பத்தின் தாக்கம் குறையாமலே உள்ளது. அதேபோல் வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் வேதனையடைந்து வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில்... வட மாநிலங்களின் கதி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் அக்னி வெயில் நிறைவடைந்தாலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாமலேயே காணப்படுகிறது.

திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட வெயிலின் அளவு 3-4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட மோசமாகவே அதிகரித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில்... வட மாநிலங்களின் கதி என்ன?

குறிப்பாக டெல்லியில் நிலவும் கடும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மக்கள் எவரும் வெளியே செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது டெல்லியில் 45 டிகிரிக்கும் மேல் நிலவும் வெப்பநிலை இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் டெல்லியை போன்றே வெயில் வாட்டி வதைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories