இந்தியா

தன்னை வெற்றி பெற வைத்த வயநாடு மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, தன்னை வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து, பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது.

அதே சமயத்தில், நடப்பு தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு காங்கிரஸ் ராகுல் காந்தி முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

மேலும், தனது தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாகவும், அதனை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில், நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி அமேதியில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வயநாடு தொகுதியில் அமோக வெற்றியை பெற்றிருந்தார். மக்களின் தீர்ப்பை ஏற்கொள்வதாகவும் கூறியிருந்தார்.

அதேபோல், வயநாடு தொகுதி மக்களுக்கு தனது நன்றியை மலையாளத்திலும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்த வயாநாடு தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க, வருகிற ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி என 2 இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .

banner

Related Stories

Related Stories