இந்தியா

நாடகம் முடிந்ததும் வேஷத்தை கலைத்த மோடி - ட்விட்டரில் செளகிதாரை நீக்கினார் மோடி !

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தனது ட்விட்டர் கணக்கின் பெயரில் இருந்து செளகிதார் என்கிற வார்த்தையை நீக்கியுள்ளார் பிரதமர் மோடி. 

நாடகம் முடிந்ததும் வேஷத்தை கலைத்த மோடி - ட்விட்டரில் செளகிதாரை நீக்கினார் மோடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.,11 முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் பா.ஜ.க.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மற்றும் கேரள மாநிலத்தை தவிர வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்தின் போது, மக்களிடம் அனுதாப அலையை ஏற்படுத்திக்கொள்வதற்காக செளகிதார் என்ற புனைப்பெயரை சேர்த்துக்கொண்டார் பிரதமர் மோடி. அதிலும் ட்விட்டரில் மட்டுமே செளகிதாரை இணைத்துக்கொண்டார்.

நாடகம் முடிந்ததும் வேஷத்தை கலைத்த மோடி - ட்விட்டரில் செளகிதாரை நீக்கினார் மோடி !

இந்தியில் செளகிதார் என்றால், காவலாளி என்று அர்த்தம். அதன்பிறகு மேடைகளில் பேசிய மோடி, “நான் எப்போதும் இந்தியாவின் காவலாளியாக இருப்பேன்” என்று பேசி வந்தார். மோடி மட்டுமில்லாமல், பா.ஜ.க.,வினர் பலர் செளகிதார் என்பதை ட்விட்டரில் மட்டும் இணைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்றதும், செளகிதார் என்ற பெயரை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தூக்கி எறிந்திருக்கிறார் மோடி. இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள மோடி, தனது முதல் பணியாக செளகிதாரை நீக்கியுள்ளார்.

மேலும், இது குறித்து ட்விட்டரில் மோடி கருத்தும் தெரிவித்துள்ளார். அதாவது, காவலாளி (செளகிதார்) என்பதை ட்விட்டரில் இருந்து மட்டும்தான் நீக்கியிருக்கிறேன். மனதில் இருந்து நீக்கவில்லை என பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, நாட்டு மக்களின் ஒரே செளகிதார் ( காவலாளி ) நான் என தேர்தல் பிரசாரங்களில் மட்டும் வாக்குக்காக பேசிவிட்டு, தற்போது தேர்தல் முடிவுகள் வந்த கையோடு ட்விட்டரில் இருந்து செளகிதார் பெயரை நீக்கியிருக்கிறார் மோடி.

banner

Related Stories

Related Stories