இந்தியா

அசோக் லவாசாவின் கருத்தை ஏற்க தலைமை தேர்தல் ஆணையர் முடிவு!

தேர்தல் ஆணையர்கள் இடையான கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அசோக் லவாசாவின் கருத்தை ஏற்க தலைமை தேர்தல் ஆணையர் முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டாவது தேர்தல் ஆணையருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலுக்கு இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியும் மற்றும் அமித்ஷாவும் நடத்தை விதிமுறைகளை மீறி, பேசியதாக எழுந்த புகாரில் இரண்டாவது தேர்தல ஆணையரின் கருத்தை பதிவு செய்யாமல் இருந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கும், அசோக் லவாசாவுக்கும் இடையே கருத்து போர் மூண்டது.

அசோக் லவாசாவின் கருத்தை ஏற்க தலைமை தேர்தல் ஆணையர் முடிவு!

இதுகுறித்து, சமீபத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் லவாசா பரபரப்பு கடிதம் எழுதியிருந்தார். அதில், விதிமீறல் புகார்களில் தனது கருத்தை பதிவு செய்யாததால், எதிர்வரும் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, கருத்து வேறுபாடு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர்கள் கூட்டம் கூடியது. இதில் அசோக் லவாசாவும் பங்கேற்றிருந்தார். அப்போது, இனிமேல் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்ற முடிவுக்கு வந்ததால் சுனில் அரோரா மற்றும் அசோக் லவாசா இடையேயான மோதல் முற்றுப்புள்ளிக்கு வந்தது.

banner

Related Stories

Related Stories