இந்தியா

தேர்தல் எக்ஸிட் போல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கு கணிப்புக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

தேர்தல் எக்ஸிட் போல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமாகவே கணித்திருக்கின்றன.

இதற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பும், பதிலடியுமே வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இந்த கருத்துக்கணிப்புகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 2004ம் ஆண்டும் இதேபோல், பாஜகதான் வெல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு. எனவே, மக்களின் கணிப்புகளுக்கான முடிவுகள் மே 23ல் வெளிவரும்.

மேலும், சபரிமலை விவகாரத்துக்கும் தேர்தலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதன் பின்னணியில் யார் எல்லாம் பிரச்னை செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும் என மறைமுகமாக பா.ஜ.க.வை சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories