இந்தியா

கருத்துகணிப்பு மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிக்கும் பா.ஜ.க - மம்தா பானர்ஜி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வதந்தியை நம்ப தயாராக இல்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

கருத்துகணிப்பு மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிக்கும் பா.ஜ.க - மம்தா பானர்ஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவைத் தேர்தலுக்கான கடைசிகட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதனையொட்டி, மாலை 6.30க்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது.

இதில், பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வதந்தியை நம்ப தயாராக இல்லை. ஏனெனில், இந்த கருத்துக்கணிப்பு வதந்திகள் மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கான திட்டம் உள்ளது. எனவே எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடனும், வலுவாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த யுத்தத்தை அனைவரும் ஒன்றாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories