இந்தியா

கடன் ரூ.82 லட்சம் கோடி: இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி வளர்த்த லட்சணம்!

வங்கிகளில் இந்தியா வாங்கியிருக்கும் கடன் மதிப்பு 82 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் 28 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடன் ரூ.82 லட்சம் கோடி: இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி வளர்த்த லட்சணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் நிலை குறித்து, கடந்த 2010-11 முதல் மத்திய அரசு ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி அண்மையில் அறிக்கை வெளியிட்டது. அதில் அரசுக் கடன் பத்திரத்தின் 8வது பதிப்பில் பின்வரும் கடன் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த 2014 ஜூனில் இந்தியாவின் மொத்தக் கடன் தொகை மதிப்பு ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்துள்ளது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2018 செப்டம்பர் வரையிலான நான்கரை ஆண்டுகளில், இந்த கடன்தொகை ரூ. 82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்துள்ளது.

விடுதலை அடைந்த பிறகு சுமார் 67 ஆண்டுகளில் இந்திய பெற்ற மொத்தக் கடன் மதிப்பு ரூ. 54 லட்சம் கோடி ஆகும். இதில் மோடி ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் மட்டும் 28 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இது கிட்டத்தக்க 50 சதவீதத்துக்கு மேல் ஆகும்.

இதன் மூலம் இந்தியாவின் பொதுக் கடன் 51.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டுக் கடன் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், சந்தைக் கடன் 47.5 சதவிகிதம் உயர்ந்து 52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு இறுதியில் தங்கப் பத்திரங்கள்( Gold bonds ) மீது எந்த ஒரு கடனும் இல்லாமல் இருந்தது. தங்கத்தை நாணயமாக்கல் திட்டத்தின் கடன் 9,089 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, தங்கத்தின் பெயரிலும் மோடி அரசு கடன் பெற்றுள்ளது.

அரசின் இந்தக் கடன்கள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதர சரிவு ( Middle class downturn ) மற்றும் நிதி பற்றாக்குறை என்பது ரிஸ்க் வாய்ந்தவையாக உள்ளது. இந்த கடன் அதிகரிப்பால் தற்போது நாட்டில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த அறிக்கை முடிவுகள், செப்டம்பர் 2018 காலகட்டத்திற்கு உட்பட்டவை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் வரையிலான 8 மாதங்களில் மட்டும் நாட்டின் நடப்பு நிதிப்பற்றாக்குறை ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது; இந்த பற்றாக்குறையானது, ஆண்டு வருவாயைக் காட்டிலும் ரூ. 6.24 லட்சம் கோடி அதிகம் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2016-ஆம் ஆண்டு மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கமே, இந்தியாவின் கடன் அதிகரிப்புக்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. ஏனெனில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர்தான் இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக மோசமான நிலையை அடைந்ததாகவும், இதையொட்டியே இந்தியா அதிக அளவில் கடன்களை வாங்கியிருக்கிறது என்பதும் அரசின் அறிக்கை மூலம் புலனாகியிருக்கிறது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது கூட இந்திய அரசு இவ்வளவு கடன்களை வாங்கவில்லை. ஆனால் இதுநாள் வரையிலும் இந்தியா வாங்காத கடன் அளவைக் காட்டிலும் மோடி தலைமையிலான ஆட்சி வாங்கியிருப்பது இந்தியப் பொருளாதாரத்தைச் சரிவடையச் செய்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories