இந்தியா

4-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - 61% வாக்குப்பதிவு!

இன்று தேர்தல் நடைபெற்ற 9 மாநிலங்களில் சராசரியாக 60.88% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

4-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - 61% வாக்குப்பதிவு!
ANI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது. இன்று காலை 7 மணி துவங்கி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

மகாராஷ்டிராவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, ராஜஸ்தானில் 13, மேற்குவங்கத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, ஒடிசாவில் 6, பீகாரில் 5, ஜார்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 72 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

மாலை 6 மணி நிலவரப்படி, தேர்தல் நடைபெற்ற 9 மாநிலங்களில் சராசரியாக 60.88% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.59% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விபரம் வருமாறு :

பீகார் - 59.08%

ஜம்மு காஷ்மீர் - 9.79%

மத்திய பிரதேசம் - 66.14%

மஹாராஷ்டிரா - 53.62%

ஒடிசா - 64.05%

ராஜஸ்தான் - 65.04%

உத்தர பிரதேசம் - 54.38%

மேற்கு வங்கம் - 76.59%

ஜார்கண்ட் - 63.77%

banner

Related Stories

Related Stories