இந்தியா

யாருக்கு வாக்களித்தோம் என்று சொல்லும் VVPAT இயந்திரம் எப்படி செயல்படுகிறது தெரியுமா?

இந்தத் தேர்தலில் VVPAT இயந்திரங்கள் மூலம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்று சொல்லும் VVPAT இயந்திரம் எப்படி செயல்படுகிறது தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

போடுங்கம்மா ஓட்டு!! உங்க சின்னத்தை பார்த்து!! என ஒரு மைக் செட் குழாயை மாட்டிக்கொண்டு , சைக்கிளை மிதித்தபடி ஒருவர் வாக்காளர் சின்னம் மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட நோட்டீஸ்களை பறக்கவிட்டப்படியே செல்வார். காற்றில் பறக்கும் காகிதங்களை பிடிக்க சைக்கிளின் பின்னே தாவிக்குதித்து சிறுவர்கள் ஓடுவார்கள்.

அப்படி ஆரம்பித்த தேர்தல் பிரச்சார முறை இன்று வேறு வடிவங்களில் மாறி இருக்கிறது. மாறி இருப்பது, பிரச்சாரம் மட்டுமல்ல வாக்களிக்கும் முறையும்தான்.

குடவோலை முறையில் தொடங்கி இன்று தொழில்நுட்ப புரட்சியின் அடையாளமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரையில் மூன்று முறை, நாடாளுமன்றத் தேர்தல்களிலும், 113 முறை மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

யாருக்கு வாக்களித்தோம் என்று சொல்லும் VVPAT இயந்திரம் எப்படி செயல்படுகிறது தெரியுமா?
VVPAT இயந்திரம்


வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை

கடந்தமுறை தேர்தலில் வாக்களிக்கும்போது, இரண்டு கருவிகளை மட்டுமே அங்கு பார்த்திருப்பார்கள். ஒன்று கண்ட்ரோல் யூனிட், மற்றொன்று பேலட் யூனிட் . பேலட் யூனிட்டில் வரிசை எண், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

அதில் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க விருப்பப்படுகிறோமோ அதற்கு நேராக கொடுக்கப்பட்டிருக்கும் வரிசை எண் பொத்தானை அழுத்தினால் வாக்கானது கண்ட்ரோல் யூனிட்டில் பதிவாகிவிடும். கண்ட்ரோல் யூனிட்டானது பேலட் யூனிட்டில் இருந்து தரவுகளை பெற்று அதனை பதிவு செய்து கொள்ளும். இது தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

எனினும் இந்த கருவிகள் மீதான நம்பகத்தன்மை அவ்வபோது கேள்விக்குறியாகி வருவதும், அதன் மீதான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு செல்வதும் நடந்தேறியது. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் , தாமரை சின்னத்தில் மட்டுமே உறுதிக்குறியீடான லைட் தோன்றுவதாக வாக்களர்கள் மற்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இது ஒருபுறம் இருக்க , இரண்டு கருவிகளையும் ஹேக் செய்து தேர்தல் முடிவுகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என இதனை உருவாக்கிய அதிகாரிகளில் ஒருவர் குற்றச்சாட்டை முன் வைத்தார் . அதனை தேர்தல் ஆணையம் மறுத்தாலும் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் புதிய முயற்சியை கையில் எடுத்து விவிபேட் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

யாருக்கு வாக்களித்தோம் என்று சொல்லும் VVPAT இயந்திரம் எப்படி செயல்படுகிறது தெரியுமா?

விவிபேட் பாதுகாப்பானதா? (VVPAT)

இந்த இயந்திரமானது ஒரு பெட்டி போன்ற தோற்றத்தை கொண்டது. இது பேலட் யூனிட்டுடன் இணைக்கப்படிருக்கும். வாக்களர்கள் தங்கள் ஓட்டினை சரியான நபருக்குதான் செலுத்தியிருக்கிறோமா என்பதை இதில் கொடுக்கப்பட்டிருக்கு சிறிய திரையின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

வேட்பாளர் , பெயர் , சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் அந்த மென்படிவமானது விவிபேட்(VVPAT) இயந்திரத்தின் உள்ளே இருக்கும் காகித சுருளில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பேப்பர் நகலாக அந்த பெட்டிக்குளேயே சேமிக்கப்படும். இதன்மூலம் கண்ட்ரோல் யூனிட்டி ஹேக் செய்யப்படுவதாக மக்களுக்கு சந்தேகம் எழுந்தாலும், சேமிக்கப்படும் காகிதங்கள் உண்மை தன்மையை வெளிப்படுத்தும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒரு இயந்திரத்தில் எத்தனை வாக்குகளை பதிவு செய்யலாம்?

இந்தியாவில் 16 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. ஒரு இயந்திரத்தில் 64 வேட்பாளர்கள் பெயரை பதிவேற்ற முடியும், அதிகபட்சமாக 2000 வாக்குகளை பதிவு செய்ய முடியும். வாக்குகள் பதிவு செய்யப்பட்ட பிறகு இயந்திரங்கள் சீல் செய்து பாதுகாக்கப்படும்.

விவிபேட்டை ஹேக் செய்ய முடியுமா?

அலைவரிசை சார்ந்த தொழில்நுட்பளை மட்டுமே ஹேக் செய்வது மட்டுமே சாத்தியம் மற்றும் எளிமையானது என்றும் , இந்த புதிய கருவியை ஹெக் செய்யவதென்பது சாத்தியம் இல்லை என்றும் அப்படியே சாத்தியக்கூறுகள் இருந்தாலும் ஹேக் செய்வதற்கான செலவு என்பது மிகப்பெரிய தொகையாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிட்டத்தட்ட 33 நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. அதில் சில நாடுகள் மீண்டும் குடவோலை முறைக்கே திரும்பிவிட்டன. காரணம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை மக்களுக்கு குறைந்து போனதுதான். இந்தியாவிலும் வாக்குப்பதிவு இயந்திங்கள் மீதான நம்பிக்கையின்மையை பார்க்க முடிகிறது, ஜனநாயக மக்களாட்சி தத்துவங்களை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் மக்களின் நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தாமல் , நியாயமான முறையில் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

banner

Related Stories

Related Stories