திமுக அரசு

”தமிழ்நாட்டை No.1 இடத்துக்கு கொண்டு வருவதே நமது முதலமைச்சரின் நோக்கம்” - உதயநிதி ஸ்டாலின் MLA பேச்சு!

தமிழகத்தை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வருவதுதான் பெருமை என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றார் நமது முதலமைச்சர் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டை No.1 இடத்துக்கு கொண்டு வருவதே நமது முதலமைச்சரின் நோக்கம்” - உதயநிதி ஸ்டாலின் MLA பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் துறைமுகம் தொகுதியை சார்ந்த தி.மு.கழக நிர்வாகிகளுக்கு தி.மு.கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்க - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசினை வழங்கினார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், 3-வது அலை மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாக உள்ளது. கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவே போற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. வடநாட்டு ஊடகங்கள் பாராட்டும் விதமாக நம்பர் ஒன் முதலமைச்சராக உள்ளார்.

ஆனாலும் நம்பர் ஒன் முதலமைச்சராக இருப்பது பெருமையல்லை. தமிழகத்தை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வருவதுதான் பெருமை என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றார் நமது முதலமைச்சர்.

முதலமைச்சரின் அமைச்சரவையில் நம்பர் 1 அமைச்சராக சேகர்பாபு உள்ளார். அனைத்து அமைச்சர்களுமே முதலிடம்தான் அதிலும் அமைச்சர் சேகர்பாபு முதலிடத்தில் உள்ளார். திமுக ஆட்சியமைக்கும் முன் திமுக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்ற தவறான கருத்தை அமைச்சர் சேகர்பாபு அதிரடியாக செயல்பட்டு அதனை மாற்றியுள்ளார்.

அனைவரும் அரசு விதித்துள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories