திமுக அரசு

8-ல் 7 தொகுதிகளில் தி.மு.க வெற்றி: வேளாண் சட்டங்களை ஆதரித்த அ.தி.மு.கவிற்கு பாடம் புகட்டிய டெல்டா மக்கள்!

தஞ்சை மாவட்டத்தில் 8-ல் 7 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி தி.மு.க.வின் கோட்டையாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மாறி உள்ளன.

8-ல் 7 தொகுதிகளில் தி.மு.க வெற்றி: வேளாண் சட்டங்களை ஆதரித்த அ.தி.மு.கவிற்கு பாடம் புகட்டிய டெல்டா மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி அமைகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தி.மு.க போட்டியிட்ட 174 வேட்பாளர்களில் 127 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்போது தி.மு.கவினர் மட்டுமே 130 பேர் வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.

இதன்மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ம.தி.மு.க 4, வி.சி.க, 4, சி.பி.எம் 2, சி.பி.ஐ, 2, கொ.ம.தே.க. 1 என்ற சீட் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

8-ல் 7 தொகுதிகளில் தி.மு.க வெற்றி: வேளாண் சட்டங்களை ஆதரித்த அ.தி.மு.கவிற்கு பாடம் புகட்டிய டெல்டா மக்கள்!

இந்நிலையில், திருச்சி, தூத்துக்குடி, கரூர், உளுந்தூர்ப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டியிட்ட இடங்களில் அதிகப்படியான இடங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றி அம்மாவட்டங்களை தி.மு.கவின் கோட்டையாக மாற்றியுள்ளனர்.

அந்தவகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் தி.மு.க.வும், ஒரு தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தை தி.மு.க முழுமையாக தன்வசப்படுத்தி உள்ளது.

அதேப்போல், டெல்டா மாவட்டங்களில், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளை பழிவாங்கிய அதிமுகவிற்கு டெல்டா மக்கள் பாடம் புகட்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories