திமுக அரசு

நாடே எதிர்பார்த்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் : தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை துவக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.

நாடே எதிர்பார்த்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் : தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை துவக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்த தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. இந்த சூழலில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும்.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை பிடிக்கப்போவதை அறிவதில் தமிழக மக்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், அரசியல் முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் உடல்வெப்ப நிலை பரிசோதனையில் 98.5 டிகிரி அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்தால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்பட்டு கிருமி நாசினி கொண்டு வாக்கு எண்ணும் அறையை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா காரணமாக வாக்கு எண்ணும் பணிகள் இன்று நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் இறுதி முடிவுகள் அனைத்தும் வெளிவர தாமதமாகும் என தெரிகிறது.

banner

Related Stories

Related Stories