திமுக அரசு

தோல்வி முகம் காட்டும் பொன்னார்... கன்னியாகுமரியில் முன்னிலை வகிக்கிறார் விஜய் வசந்த்!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார்.

தோல்வி முகம் காட்டும் பொன்னார்... கன்னியாகுமரியில் முன்னிலை வகிக்கிறார் விஜய் வசந்த்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளிவரத் தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை, தற்பொது முதல் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது.

ஆரம்பம் முதல் திமுக கூட்டணி நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த போட்டியிட்டுள்ளார். அதேபோல் அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கடந்த முறை மறைந்த எம்.பி வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தோல்வி அடையும் நிலையில் உள்ளார்.

அதன்படி விஜய் வசந்த் 4533 வாக்குகளும், பொன். ராதாகிருஷ்ணன் 1164 வாக்குகளும் பெற்றிருந்தனர். முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 3369 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

banner

Related Stories

Related Stories