திமுக அரசு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி பேனர் வைத்து அதிமுக வேட்பாளர் அட்டகாசம்; காங்கேயத்தில் நடந்த ட்விஸ்ட்!

காங்கேயம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக களம் இறங்கியவர், வெற்றி பெற்றதாக பேனர் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி பேனர் வைத்து அதிமுக வேட்பாளர் அட்டகாசம்; காங்கேயத்தில் நடந்த ட்விஸ்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில், தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனும், அ.தி.மு.க சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கம் என்கிற முருகவேலும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்நிலையில் , அ.தி.மு.க வேட்பாளரை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி என காங்கேயம் தொகுதிக்குட்பட்ட பழையகோட்டை பகுதியில் அ.தி.மு.க உறுப்பினர்களால் பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில், 13,483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி பேனர் வைத்து அதிமுக வேட்பாளர் அட்டகாசம்; காங்கேயத்தில் நடந்த ட்விஸ்ட்!

இது தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பேனர் அகற்றப்பட்டது.

பேனர் வைத்த சில மணி நேரங்களில் அது அகற்றப்பட்டாலும் வாக்கு வித்தியாசம் முதற்கொண்டு இடம்பெற்றது பல்வேறு கேள்விகளுக்கு இடமளித்துள்ளது.

ஏற்கெனவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டங்கள் இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வெற்றி பெற்றதாக அ.தி.மு.க-வினர் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிகையில் தி.மு.கவின் மு.பெ.சாமிநாதன் 94197 பெற்று தன்னைவிட 7,340 வாக்குகள் பின் தங்கியிருந்த அதிமுகவின் ராமலிங்கத்தை தோற்கடித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories