தேர்தல்2021

“அமைச்சர் பாண்டியராஜன் மாண்பில்லாமல் செயல்பட்டிருக்கிறார்” - அனிதாவின் சகோதரர் கடும் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க அமைச்சர்‌ பாண்டியராஜன் மனிதனுக்குறிய மாண்பு இல்லாமல் நடத்துள்ளார் என மறைந்த அரியலூர் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கூறியுள்ளார்.

“அமைச்சர் பாண்டியராஜன் மாண்பில்லாமல் செயல்பட்டிருக்கிறார்” - அனிதாவின் சகோதரர் கடும் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதா அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக பேசியதாக சித்தரித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் வெளியிட்டது பெரும் சர்ச்சையையும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில், பாண்டியராஜனின் ட்விட்டர் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் கடிதத்தில் “தமிழக அமைச்சரும் அ.தி.மு.க வேட்பாளருமான கே. பாண்டியராஜன் இறந்து போன என் தங்கை அனிதா பேசுவதாக பொய்யாக சித்தரித்த ஆடியோவை வீடியோவுடன் இணைத்து ட்விட்டரில் வெளியிட்டது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.

அனிதா 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் திடீரென நீட்தேர்வு திணித்ததின் காரணமாக மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு சிதைந்தது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இறந்துபோன என் தங்கையின் போராட்டம் நீட் தேர்வுக்கு எதிராகவும் அது ஏழை மக்களை எவ்வாறு பாதிக்கும் என்றும் கண்டனங்கள் தெரிவித்ததை தமிழ்நாடு மக்கள் அறிவார்கள்.

இந்நிலையில் அமைச்சரும் அ.தி.மு.க வேட்பாளருமான பாண்டியராஜன் இறந்து போன என் தங்கை அனிதா பேசுவதாக சித்தரித்து தவறான வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி குற்றமாகும்.

அவர் பதிவிட்ட அந்த வீடியோவை அனிதா போராட்டத்தையும் இறப்பையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இது அவர் சார்ந்த கட்சியின் வெற்றி வாய்ப்புக்காக எங்கள் குடும்பத்தினரின் சம்மதமின்றி அனிதா படம் வீடியோவை பயன்படுத்தி இருப்பதாகவும் குற்றமாகும்.

வாக்காளர்களை ஏமாற்றும் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் புகார் தந்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மணிரத்தினம் பேசிய போது

தவறு செய்து விட்டு பதிவை எடுத்து விடுகிறோம் என்றால் அது சரியாகிவிடுமா? அவர் செய்தது தவறு என்பது அவருக்கே தெரிந்துள்ளது. அந்த தவறுக்கான தண்டணையை கொடுக்கனும் நானும் அதை சட்டப்படி வாங்கி தருவேன்.

மக்களும் தேர்தலில் தவறுக்கான தண்டனையை கொடுப்பார்கள். அவர் சாதாரண நபர் கிடையாது. சும்மா எடிட் பண்ணி போஸ்ட் போட்டேன் என்று கூற முடியாது. அவர் அமைச்சர். மனிதனுக்குறிய மாண்பு இல்லாமல்தான் அவர் நடத்துள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

அனிதாவின் சகோதரர் மணிரத்தனம் கொடுத்த புகாரை மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories