திமுக அரசு

“கால்ல விழுந்து சி.எம் ஆனவருக்கு சரியான பக்குவம் இல்லீங்க” : யாரைச் சொல்கிறார் பிரேமலதா?

“கூட்டணியை வெற்றிக் கூட்டணியை மாற்றும் பக்குவம் அற்றவர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சித்துள்ளார் பிரேமலதா.

“கால்ல விழுந்து சி.எம் ஆனவருக்கு சரியான பக்குவம் இல்லீங்க” : யாரைச் சொல்கிறார் பிரேமலதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம், எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகி, கடைசி நேரத்தில் அ.ம.ம.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அ.ம.மு.க கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது பேசிய அவர், நாங்கள் அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைக்கச் செல்லவில்லை. அவர்கள்தான் கூட்டணி அமைக்க வந்தனர். கூட்டணி விவகாரத்தில் கடைசி நிமிடம் வரை இழுத்தடித்து தவறு செய்தது அ.தி.மு.க.

தே.மு.தி.கவுக்கு பக்குவம் இல்லை என முதல்வர் பழனிசாமி நேற்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் பழனிசாமியிடம் இல்லை. கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றும் பக்குவம் அவரிடம் இல்லை.

அவர்கள் காலதாமதம் செய்துவிட்டு, பழிபோடுவது மட்டும் எங்கள் மீதா? கூட்டணியில் இருப்பதே பா.ஜ.க பா.ம.க, தே.மு.தி.க என 3 கட்சிகள்தான். ஒரே நாளில் கூட்டணிக் கட்சிகளை அழைத்து யாருக்கு எத்தனை தொகுதிகள் என பேசியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மற்ற கட்சிகளை தனித்தனியாக அழைத்துப் பேசிவிட்டு கடைசியாகத்தான் எங்களை அழைத்தனர்.

இதேபோலத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மெத்தனம் காட்டி, கடைசி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்கினர். கூட்டணியை வெற்றிக் கூட்டணியை மாற்றும் பக்குவம் அற்றவர் எடப்பாடி பழனிசாமி.” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories