திமுக அரசு

“பா.ஜ.க, பா.ம.க சொல்லுக்கு ஆடும் அ.தி.மு.க தலைமை” : வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி!

அ.தி.மு.க அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“பா.ஜ.க, பா.ம.க சொல்லுக்கு ஆடும் அ.தி.மு.க தலைமை” : வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவோர் தொடர்பான 177 வேட்பாளர்களின் பட்டியல் 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது.

அதில் இரண்டே இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள், 14 பெண் வேட்பாளர்கள் என கண் துடைப்புக்காக இடம் பெறச் செய்தது அதிருப்தி அடையச் செய்ததை போன்று கட்சிக்காக பணியாற்றுவோரை அ.தி.மு.க தலைமை புறக்கணித்துள்ளதாகவும் எடப்பாடி - ஓ.பி.எஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபோக, அ.தி.மு.கவினர் கேட்ட தொகுதிகளை பாஜகவுக்கும் பா.ம.கவுக்கும் கொடுத்ததால் அ.தி.மு.க நிர்வாகிகள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

“பா.ஜ.க, பா.ம.க சொல்லுக்கு ஆடும் அ.தி.மு.க தலைமை” : வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி!

இதனால் கடும் அதிருப்திக்குள்ளான அ.தி.மு.கவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி, அரியலூர், பல்லடம், ஆலங்குளம், செய்யூர் என பல இடங்களில் அ.தி.மு.க தலைமையை கண்டித்து சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் கட்சியில் சேர்ந்தவர்களையெல்லாம் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது வேதனைக்குரியது என தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை ஆலங்குடியில் 30க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்த போதும் அவர்களை கண்டுகொள்ளாமல் தர்ம தங்கவேலு என்பவரை வேட்பாளராக நியமித்ததற்கு எதிராக 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் போராட்டத்தில் குதித்து தீக்குளிக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது போன்று சொந்த கட்சியினரையே திருப்திப்படுத்தாமல், ஜனநாயகத்தை கடைப்பிடிக்காமல் பா.ஜ.க., பா.ம.க சொல்வதற்கெல்லாம் அ.தி.மு.க தலைமை செவிசாய்த்து வருகிறது எனவும் அக்கட்சித் தொண்டர்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories