திமுக அரசு

தி.மு.க கூட்டணிக்கு கருத்து சொல்லும் வைத்தி கும்பலுக்கும், இனமணிக்கும் முரசொலி பதிலடி!

தொகுதிகள் குறைவு என்று எழுதுவது வாயை வாடகைக்கு விடுவதற்குச் சமம். வைத்தி எப்போதோ வாயை வாடகைக்கு விட்டு விட்டு வாழ்பவர் என்பது தினமணி வாசகர்களே ( இருந்தால்!) அறிவார்களே!

தி.மு.க கூட்டணிக்கு கருத்து சொல்லும் வைத்தி கும்பலுக்கும், இனமணிக்கும் முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க கூட்டணியின் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து அவதூறாக பேசி வரும் பத்திரிக்கைக்கு ஊடகவியலாளர் ப.திருமாவேலன் அவர்கள் முரசொலியில் எழுதியுள்ள பதிலடி பின்வருவன:

பக்கத்து டேபிளில் சாப்பிடுபவனைப் பார்த்தே வயிறு எரியும் ரகமாகச் சிலர் இருப்பார்கள்! அப்படி ஒரு ரகம் வைத்தி!

தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டதே என்ற ஆற்றாமை எரிச்சலில் அஜாதசத்ரு என்ற பெயரால் வாய்க்கு வந்ததை எல்லாம் தனது அரசியல் கனைப்பாக எழுதித் தீட்டிவிட்டார். எடிட்டர் என்பதால் எழுதிக் கொடுத்ததை எல்லாம் போட்டுத் தொலைக்க வேண்டிய கட்டாயம் அந்த இனமணிக்கு வந்திருக்கிறது.

காங்கிரஸுக்கு அவ்வளவு கொடுத்திருக்கலாம், ம.தி.மு.க.வுக்கு இவ்வளவு கொடுத்திருக்கலாம் என்று இந்த தாராள பிரபு தாளில் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறார். தொகுதிகளை வாங்கும் கட்சியில் இருக்கிறாரா? அல்லது தொகுதியைக் கொடுக்கும் கட்சியில் இருக்கிறாரா? வருகிற செய்தியை வாங்கிப் போட துப்பு இல்லாத மங்குனி ஆசிரியர், தனது மாலை வேளை சுண்டல் சொற் பொழிவுகளுக்கு கொரோனா காலம் தடை போட்டுவிட்டதால் நித்தமும் தி.மு.க கூட்டணியைப் பற்றி எதையாவது எழுதி அந்தக் கூட்டணியை எப்படியாவது உடைத்துவிடலாமா என்று பித்தம் பிடித்து உளறலை எழுதிக் கொண்டு இருக்கிறார்.

காங்கிரஸை, தி.மு.க.வுக்கு சுமை என்று இரண்டு நாளுக்கு முன் எழுதியதும் இதேவைத்திதான். இப்போது காங்கிரஸுக்கு சீட் குறைந்து விட்டதே என்று குரைப்பதும் இதேவைத்திதான். காங்கிரஸும் ம.தி.மு.க.வும் கமலஹாசனுடன் சேரவேண்டும் என்று எழுதி ‘அவாள்' வேலை பார்த்ததும் அதே வைத்தி தான்.

தி.மு.க கூட்டணிக்கு கருத்து சொல்லும் வைத்தி கும்பலுக்கும், இனமணிக்கும் முரசொலி பதிலடி!

இவை அனைத்திலும் மண் விழுந்ததும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக எழுதுவதும் இதே வைத்தி தான். இந்த அதிமேதாவியை பழனிசாமி அழைத்து தனக்கு பக்கத்தில்வைத்துக் கொள்ளலாமே?

இந்த நாட்டின் முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் அர்த்த ராத்திரியில் அழைத்து ‘சாக்கடை ஜலத்தை குடித்துத்தான் ஆக வேண்டும்' என்று உள்துறை அமைச்சர் மிரட்டியதைக் கேள்வி கேட்கத் துப்பு இல்லை!

இந்தியாவையே ஆளும் கட்சி 60க்கு குறையாமல் நிற்போம் என்று சொல்லி, 41க்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, இறுதியில் 20 கொடுத்ததை வாங்கிக் கொண்டு வாலைச் சுருட்டிக் கொண்டதைக் கேள்வி கேட்கத் துப்பு இல்லை! 37 மாம்பழங்களை வாங்கிய ‘பெரிய டாக்டரு’ இப்போது 23 மாம்பழம் வாங்கிக்கொண்டு வாயடைத்துக் கிடப்பதை கேட்கத் துப்பு இல்லை!

உலக மகா தேர்தல் அரசியல் புள்ளி விபரங்கள் எல்லாம் தி.மு.க கூட்டணியைப் பற்றி எழுதும்போதுதான் வைத்தி வகையறாவுக்கு வருகிறது என்றால் இவர்களது தேர்தல் அரசியல் வாக்குச்சீட்டில் இல்லை, வயிற்றுக்கு மேலே உருளும் நூலில் மட்டும்தான் இருக்கிறது!

தி.மு.க கூட்டணிக்கு கருத்து சொல்லும் வைத்தி கும்பலுக்கும், இனமணிக்கும் முரசொலி பதிலடி!

‘கொடுத்ததை வாங்கிக் கொள்’ என்று தி.மு.க ஆணவத்தால் மிரட்டியதாம். வைத்திவீட்டு வாசலுக்கு வந்து யாராவது சொன்னார்களா? இந்த தொகுதி உடன்பாடு குறித்தும், வாங்கிய தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகச் சொன்னார்கள்.

“தமிழகத்தை காவிமயமாக்க அனுமதிக்க மாட்டோம், அதற்காகத் தான் தி.மு.க.வுடன் அணி சேர்ந்துள்ளோம்! தி.மு.க. தான் ஆளும் கட்சியாக வேண்டும்! தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வேண்டும்!

இன்றைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க ஒவ்வொரு மாநிலத்திலும் ஜனநாயகத்தைக் கற்பழித்து வருகிறது. பெரும்பான்மை ஆட்சியையே சிதைத்துக் கவிழ்க்கிறது. அது போன்ற சூழல் தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தி.மு.க. அதிகமான எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும்” - என்று தி.மு.க சொல்ல வேண்டியதை அந்தத்தலைவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். இதுதான் உண்மையான காரணம்.

இந்திய அரசியலைக் கரைத்துக் குடித்த அதிமேதாவி வைத்தி, இப்படி எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை என்று எழுதட்டும். இப்படி கூட்டணிக் கட்சிகள் சொல்வது தவறு என்று எழுதட்டும். அதுதான் நேர்மையான பத்திரிக்கையாளனுக்கு அழகு. அதை விட்டு விட்டு, தொகுதிகள் குறைவு என்று எழுதுவது வாயை வாடகைக்கு விடுவதற்குச் சமம். வைத்தி எப்போதோ வாயை வாடகைக்கு விட்டு விட்டு வாழ்பவர் என்பது தினமணி வாசகர்களே ( இருந்தால்!) அறிவார்களே!

banner

Related Stories

Related Stories