திமுக அரசு

“மு.க.ஸ்டாலினின் 7 தொலைநோக்குத் திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே” - கருத்துக்கணிப்பு முடிவில் தகவல்

நியூஸ் 7 தொலைக்காட்சி நடத்திய வாக்கெடுப்பில் 65 சதவிகித மக்கள் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.

“மு.க.ஸ்டாலினின் 7 தொலைநோக்குத் திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே” - கருத்துக்கணிப்பு முடிவில் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சியில் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏழு முக்கிய தொலைநோக்குத் திட்டங்களை நேற்று முன்தினம் லட்சக்கணக்கான மக்களின் கரவொலிகளுக்கிடையே அறிவித்தார்.

இந்த 7 முத்தாய்ப்பான திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயளனிக்கக் கூடிய வகையில் அமைவது திண்ணம் என்று பொதுமக்கள், கல்வியாளர்கள், அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் சொல்லி வருகிறார்கள்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று (8.3.2021) இரவு 7.30 மணி முதல் 8 மணி வரையில் ‘நியூஸ் 7’ தொலைக்காட்சியில் ‘கேள்வி நேரம்’ பகுதியில் "பத்தாண்டுக்களுக்கான தொலைநோக்குத் திட்டத்தை ஸ்டாலின் அறிவித்திருப்பது?" என்று கேள்வி எழுப்பி,

அ.தி.மு.க.வுக்கு நெருக்கடிதர...

தாக்கத்தை ஏற்படுத்தாது...

வாக்குக்காக...

தமிழக வளர்ச்சிக்காக...

என்று நான்கு பதில்களையும் முன்வைத்து இதில் மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யக்கோரி இருந்தனர்.

“மு.க.ஸ்டாலினின் 7 தொலைநோக்குத் திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே” - கருத்துக்கணிப்பு முடிவில் தகவல்

விவாதத்தின் முடிவில் அக்கருத்துகளை சதவிகிதத்தின் அடிப்படையில் ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி வெளியிட்டு இருந்தது. அதில், அ.தி.மு.க.விற்கு நெருக்கடிதர - 4 சதவிகிதம் தாக்கத்தை ஏற்படுத்தாது -9 சதவிகிதம் வாக்குக்காக - 22 சதவிகிதம் தமிழக வளர்ச்சிக்காக -65 சதவிகிதம் என தமிழக மக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து, திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தமிழகத்தின் "விடியலுக்கான முழக்கம்" "பொதுக்கூட்டத்தில் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 அறிவிப்புகளும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகத்தான் என்று தங்களின் அபரிமிதமான ஆதரவை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் தி.மு.கழக ஆட்சி தமிழகத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்து, திருச்சியில் அறிவித்த ஏழு தொலைநோக்கு, திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, தமிழகம் பொருளாதாரத்தில், நிர்வாகத்தில், கல்வி - சுகாதாரத்தில், ஊரக கட்டமைப்பில், சமூக நீதியில் மேம்பட்டு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்பது திண்ணம்.

இதனைத்தான் ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி கேள்வி நேரம் பகுதியில் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை ஸ்டாலின் அறிவித்திருப்பது "தமிழக வளர்ச்சிக்காகவே!" என்று 65 சதவிகித மக்கள் வாக்களித்து மெய்ப்பித்து காட்டியிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories