திமுக அரசு

#Exclusive: பரபரக்கும் இறுதிநேர தேர்தல் களம் - திமுக கூட்டணியில் யார் யார்? யார் ஆதரவு? எத்தனை தொகுதிகள்?

பா.ஜ.க கூட்டணியின் முயற்சிகளை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

dmk congress alliance
twitter dmk congress alliance
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட முன்னணி கட்சிகள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25, வி.சி.க, ம.தி.முக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவாலயத்தில் தி.மு.க தொகுதி பங்கீடு குழுவுடன் ஆலோசனை செய்து வருகிறார். இதனிடையே மனிதநேய ஜனநாயக கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இதற்கான ஆதரவு கடிதமும் தி.மு.க தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதித் தமிழர் பேரவை ஆதரவு தெரிவிக்கிறது என அறிவித்துள்ளார். அதேபோல், பா.ஜ.க கூட்டணியின் முயற்சிகளை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இன்று மாலை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித் தமிழர் பேரவை மற்றும் மக்கள் விடுதலை கட்சிக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories