தேர்தல் 2024

INDIA vs NDA... வெற்றிவாகை சூடப்போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் தபால் வாக்கு எண்ணிக்கை !

INDIA vs NDA... வெற்றிவாகை சூடப்போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் தபால் வாக்கு எண்ணிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

INDIA vs NDA... வெற்றிவாகை சூடப்போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் தபால் வாக்கு எண்ணிக்கை !

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு, பீகார், உத்தர பிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பது மேலும் உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories