தேர்தல் 2024

தமிழ்நாட்டில் மீண்டும் மலராத தாமரை... 40-லும் மாஸ் காட்டிய முதலமைச்சரின் உடன்பிறப்புகள் !

தமிழ்நாட்டில் மீண்டும் மலராத தாமரை... 40-லும் மாஸ் காட்டிய முதலமைச்சரின் உடன்பிறப்புகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் மீண்டும் மலராத தாமரை... 40-லும் மாஸ் காட்டிய முதலமைச்சரின் உடன்பிறப்புகள் !

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு & புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தர்மபுரி ஆ.மணி, CPI (M) வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக இந்த தேர்தலில் 'குதித்தால் தலைகீழாகதான் குதிப்பேன்' என்பது போல் தன்னிச்சையாக போட்டியிட முடிவு செய்தது. அதன்படி பாஜக தலைமையை ஏற்று பாமக, தமிழ்மாநில காங்கிரஸ், அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, ஓபிஎஸ் அணி உள்ளிட்டோர் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுவை என அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது.

தமிழ்நாட்டில் மீண்டும் மலராத தாமரை... 40-லும் மாஸ் காட்டிய முதலமைச்சரின் உடன்பிறப்புகள் !

அதில் கோயம்பத்தூரில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை, கன்னியாகுமரியில் போன்.ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம் நீலகிரியில் எல்.முருகன், தென்காசியில் ஜான் பாண்டியன், விருதுநகரில் ராதிகா சரத்குமார் என பாஜகவின் முக்கிய முகங்களும், தர்மபுரியில் பாமக சார்பில் சௌமியா அம்புமணி என தொடர்ந்து போட்டியிட்டனர்.

இதில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. மேலும் பாஜக கூட்டணியும் தோல்வியடைந்துள்ளது. தற்போது திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சொன்னதை போல புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அரசு அமோக வெற்றி பெற்று அசதியுள்ளது.

banner

Related Stories

Related Stories