இந்தியா

”மோடியை புறக்கணித்து விட்டது இந்திய தேசம்” : ராகுல் காந்தி பேட்டி!

மக்களவை தேர்தலில் மோடியை மக்கள் புறக்கணித்துள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

”மோடியை புறக்கணித்து விட்டது இந்திய தேசம்” : ராகுல் காந்தி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது.

10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சிதான் அமைய உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, ”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது. இந்திய மக்கள் ஜனநாயகத்தை எப்போதும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. மக்களின் தீர்ப்பு அரசியல் சாதனத்தை பாதுகாக்க உதவியுள்ளது.

மக்களவை தேர்தலில் மோடியை மக்கள் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஒரு புதிய பார்வையை தந்திருந்தது. அதனை மக்கள் ஆதரித்துள்ளார்கள். தேர்தலில் உறுதியுடன் போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories