தேர்தல் 2024

”மோடியின் பெயரைக் கூறக்கூட தேர்தல் ஆணையத்திற்கு துணிச்சல் இல்லை” : சாகேத் கோகலே ஆவேசம்!

”மோடியின் பெயரைக் கூறக்கூட தேர்தல் ஆணையத்திற்கு துணிச்சல் இல்லை” என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே விமர்சித்துள்ளார்.

”மோடியின் பெயரைக் கூறக்கூட தேர்தல் ஆணையத்திற்கு துணிச்சல் இல்லை” : சாகேத் கோகலே ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மத ரீதியான கருத்துக்களை பேசிவருகிறார்கள். அதிலும் பிரதமர் மோடியே இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள்.

"காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்களை பிடிங்கி இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள் என்றும் இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அதேபோல் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும் மத ரீதியான இருத்துக்களையே பேசி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் வெறுப்பு பேச்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரிவினையை தூண்டும் விதமாக தேர்தல் பிரச்சாரத்தில் தங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பேசாமல் தடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டாவுக்கு தேர்தல் ஆணையும் வலியுறுத்தியுள்ளது.

பின்னர் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ”மோடியின் பெயரைக் கூறக்கூட தேர்தல் ஆணையத்திற்கு துணிச்சல் இல்லை” என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "5 கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு நட்சத்திர பேச்சாளர்கள் மதவாத பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் மோடியின் பெயரைக் கூறக்கூட தேர்தல் ஆணையத்திற்கு துணிச்சல் இல்லை." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories