தேர்தல் 2024

மோடிக்கு எதிராக 55 பேர் வேட்பு மனுத்தாக்கல்... நிராகரித்த தேர்தல் ஆணையம் - குவியும் கண்டனம்!

மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த காமெடி கலைஞர் ஷ்யாம் ரங்கீலாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

மோடிக்கு எதிராக 55 பேர் வேட்பு மனுத்தாக்கல்... நிராகரித்த தேர்தல் ஆணையம் - குவியும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மீதமிருக்கும் தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நேற்று நடைபெற்றது.

மோடிக்கு எதிராக 55 பேர் வேட்பு மனுத்தாக்கல்... நிராகரித்த தேர்தல் ஆணையம் - குவியும் கண்டனம்!

அதில் மோடி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதிக்கு வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் (14.05.2024) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு மோடி உள்ளிட்ட அனைவரும் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். அந்த வகையில் மோடியை எதிர்த்து பிரபல காமெடி கலைஞர் ஷ்யாம் ரங்கீலா என்பவரும் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

மோடிக்கு எதிராக 55 பேர் வேட்பு மனுத்தாக்கல்... நிராகரித்த தேர்தல் ஆணையம் - குவியும் கண்டனம்!

இது பெரும் பேசுபொருளான நிலையில், "வெற்றியோ தோல்வியோ, மோடியை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். பிரபலமாவதற்காக மோடிக்கு எதிராக வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. ஏனெனில் நான் ஏற்கனவே பிரபலமாகதான் இருக்கிறேன்." என்று பதிலளித்தார். இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிராக 55 பேர் வேட்பு மனுத்தாக்கல்... நிராகரித்த தேர்தல் ஆணையம் - குவியும் கண்டனம்!

மேலும் மோடிக்கு எதிராக 55 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அதில் ஊடகவியலாளர் டுஷா மிட்டல், ஷயாம் ரங்கீலா உள்ளிட்ட 36 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories