தேர்தல் 2024

”தோல்வி பீதியில் வாக்காளர்களை மிரட்டும் பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

”தோல்வி பீதியில் வாக்காளர்களை மிரட்டும் பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே  குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது.நான்கு கட்ட தேர்தல் முடிவுகளும் இந்தியா கூட்டணி ஆட்சியை உறுதி செய்துவிட்டது. ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இன்று உத்தர பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "இரண்டு சித்தாந்தங்களுக்கான போராட்டம் இது. ஏழை மக்களுக்கு ஆதரவான கட்சிகள் ஒருபுறம், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் மதத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மறுபுறம். நாங்கள் ஏழை மக்களுக்காக வேலையில்லா திண்டாட்டத்திற்காக, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடுகிறோம்.

தலித்துகள், ஆதிவாசிகள் அவர்களது இடஒதுக்கீட்டை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். 26 கட்சிகள் இணைந்து முதல் முறையாக தேர்தலை சந்திப்பதை பார்கிறேன். நாட்டின் நிலைமையின் தீவிரத்தை இது காட்டுகிறது.

பிரதமர் மோடியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஜூன் 4 ஆம் தேதி பத்திரிகையாளர்கள் முதல் அணைவருக்கும் விடுதலை கிடைக்கும். நான்கு கட்ட தேர்தல் முடிவுகளும் இந்தியா கூட்டணி ஆட்சியை உறுதி செய்துவிட்டது. ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி.

இஸ்லாமிய மக்களை விமர்சித்து பேசவில்லை என்று அப்பட்டமாக பொய் பேசுகிறார் மோடி. இப்படி பொய் பேசும் ஒரு பிரதமரை நான் பார்த்ததே இல்லை

தோல்வி பயத்தில் வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டிவருகிறது. ஹைதராபாத்தில் இஸ்லாமிய பெண்களின் பர்தாவை விலக்கி மிரட்டும் தொனியில் பா.ஜ.க வேட்பாளர் நடந்து கொண்டுள்ளார். நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories