தேர்தல் 2024

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பா.ஜ.க மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

7 கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலில் 2 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் மே 7 ஆம் தேதி 94 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் குஜராத் மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் மீண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சோனம் படேல் போட்டியிடுகிறார்.

அதேபோல் அமித்ஷாவை எதிர்த்து 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் தற்போது 14 பேர் மட்டுமே களத்தில் இருக்கிறார்கள். மேலும் 17 வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களிடம், மனுக்களை திரும்பப் பெற கோரி பா.ஜ.க மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவின் மிரட்டல் காரணமாகவே ஜிஜேந்திர சௌகான், ஜெத்தின் ரத்தோடு உள்ளிட்ட 17 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரஜாதந்திரா ஆதார் கட்சியின் வேட்பாளர் சுமித்ரா மவுரியா தானும் தன்னுடைய கணவரும் விரட்டப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10க்கும் மேற்பட்டோர் என்னுடைய வீட்டிற்குள் புகுந்து வேட்பு மனுவைத் திரும்பப் பெற கோரி மிரட்டல் விடுத்தாக தெரிவித்துள்ளார். இது குறித்து சுமித்ரா மவுரியா மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இருந்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பா.ஜ.கவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத் மாநிலத்திலேயே எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது தோல்வி பீதியில் பா.ஜ.க இருப்பதைக் காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories