தேர்தல் 2024

“சிறையில் அடைத்ததற்கு பதிலடி கொடுக்க வாக்களிப்போம்” - ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை!

ஆம் ஆத்மியின் தேர்தல் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சிறையில் அடைத்ததற்கு பதிலடி கொடுக்க வாக்களிப்போம்” - ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் முதற்கட்ட தேர்தல் ஏப்.19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் ஏப்.26-ம் தேதியும் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

மேலும் மாநிலத்தில் ஆளும் கட்சிகள், தங்கள் கட்சிக்கு என்று தனியாக பிரசார பாடல் ஒன்றையும் உருவாக்கி மக்கள் மத்தியில் ஒளிபரப்பு செய்கின்றனர். அந்த வகையில் டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி, தங்கள் தேர்தல் பிரசார விளம்பர பாடல் ஒன்றை உருவாக்கி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வெளியீடு செய்தது.

“சிறையில் அடைத்ததற்கு பதிலடி கொடுக்க வாக்களிப்போம்” - ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை!

இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இது உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பாடலானது, "டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக ஆம் ஆத்மி (துடைப்பம் சின்னத்துக்கு) வாக்களிப்போம்" என்று வரிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் டெல்லிக்கு டெல்லி அரசு செய்த நல்லவர்களும், டெல்லி அரசுக்கு பாஜக செய்த கொடூரங்களையும் அந்த பாடல் விளக்குகிறது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் இந்த பாடலுக்கு தற்போது தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தடை விதித்ததோடு இந்த விளம்பரத்தை மாற்றியமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தற்போது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. பாடலுக்கு தடை விதித்ததற்கு காரணத்தையும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

“சிறையில் அடைத்ததற்கு பதிலடி கொடுக்க வாக்களிப்போம்” - ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை!

அதில் 'சிறை' குறித்த வரிகள் இடம்பெறும்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை கம்பிகளுக்குப் பின்னால் காட்டுவது போன்ற புகைப்படம் இருப்பது, நீதித்துறையின் மீது அவநம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகளுக்கு மாறான விளம்பரம் என்றும், தடை விதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாஜகவின் கைப்பாவை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சியின் பாடலுக்கு தடை விதித்துள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. பாஜகவினரும், மோடியும் தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி வரும் நிலையில், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories