தேர்தல் 2024

நாளை 2 ஆம் கட்ட தேர்தல் : எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!

13 மாநிலங்களில் நாளை 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாளை 2 ஆம் கட்ட தேர்தல் : எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்.19 ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 66% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2019 தேர்தலைவிட குறைந்த வாக்குப்பதிவாகும்.

இதையடுத்து 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை வெள்ளிக்கிழமை 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் நேற்று மாலைதான் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.

வாக்குப்பதிவுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் 13 மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 முதல் முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் :

அசாம் - 5 (14)

பீகார் - 5 (40)

சத்தீஸ்கர் -3 (11)

கர்நாடகா -14 (28)

கேரளா - 20 (20)

மத்திய பிரதேசம் - 7 (29),

மகாராஷ்டிரா 8 (48),

மணிப்பூர் - 1,

ராஜஸ்தான் - 13 (25)

திரிபுரா 1 (2),

உத்தர பிரதேசம் 8 (80),

மேற்கு வங்கம் 3 (42),

ஜம்மு மற்றும் காஷ்மீர் 1 (5)

ஆகிய 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

banner

Related Stories

Related Stories