இந்தியா

”பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சூரத் மாடல் தேர்தல்தான்" : லாலு பிரசாத் எச்சரிக்கை!

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து நாட்டை காப்பாற்றுங்கள் என லாலு பிரசாத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சூரத் மாடல் தேர்தல்தான்" : லாலு பிரசாத் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

7 கட்டமாக நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப். 19 ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து நாளை 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், “ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் காக்க வேண்டிய தேர்தல் இது” என கூறி காங்கிரஸின் கை சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல் சமாஜ்வாடி கட்சி நிறுவனர் லாலு பிரசாத், ”பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம், ஜனநாயகம், அரசுவேலைகள், இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு முடிவு கட்டிவிடும்.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகத்தை எப்படி ஒழித்தார்கள் என்பதை நாடே பார்த்தது. அதேபோல் குஜராத் மாநிலம் சூரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்து வாக்களர்களின் ஜனநாயக வாக்குரிமையைப் பறித்துவிட்டார்கள்.

இந்த முக்கியமான தேர்தலில் நாட்டை காப்பாற்ற மனசாட்சியுடனும் புத்திசாலித்தனத்துடனும் இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்து நாட்டைக் காப்பாற்றுங்கள். இல்லையெனில் பா.ஜ.க அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் அழித்துவிடும்.”என x சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories