தேர்தல் 2024

இந்த தொகுதியை தக்கவைக்க முடியுமா? : சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.க லடாக் MP ஆதங்கம்!

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே மக்களவை தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க அறிவித்துள்ளது.

இந்த தொகுதியை தக்கவைக்க முடியுமா? : சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.க லடாக் MP ஆதங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

7 கட்டமாக நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப். 19 ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாளை 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் 5 ஆம் கட்டமாக நடைபெறும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே மக்களவை தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க அறிவித்துள்ளது.

தற்போது எம்.பியாக இருக்கும் ஜம்யங்க் நம்க்யாலுக்கு பதில், தாஷி கியால்சனின் பெயரை பா.ஜ.க அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.கவில் இருந்து ஜம்யங்க் நம்க்யால் விலகப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ”நான் கட்சியின் சித்தாந்தத்திலிருந்து விலகினேனா?, யாரிடமாவது தவறாக நடந்து கொண்டேனா என்பதை மூத்த தலைவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தாஷி கியால்சனை வேட்பாளராக நிறுத்தும் பாஜகவின் முடிவை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு எனது முடிவை அறிவிப்பேன். பா.ஜ.கவால் இந்த தொகுதியை தக்கவைக்க முடியுமா?" என ஜம்யங்க் நம்க்யால் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories