தேர்தல் 2024

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் பிக் பாஸ் வீட்டில்தான் இருப்போம்..” - எச்சரிக்கும் ஆதித்ய தாக்கரே!

ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் பிக் பாஸ் வீட்டில் வீட்டில்தான் இருப்போம் என ஆதித்ய தாக்கரே எச்சரித்துள்ளார்.

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் பிக் பாஸ் வீட்டில்தான் இருப்போம்..” - எச்சரிக்கும் ஆதித்ய தாக்கரே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து - முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்றனர் பாஜகவினர். குறிப்பாக இராமர் கோயில் விவகாரத்தை வைத்தே வட மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜகவின் இந்த விஷம அரசியல் பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று இந்தியா கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் பிக் பாஸ் வீட்டில் வீட்டில்தான் இருப்போம் என ஆதித்ய தாக்கரே எச்சரித்துள்ளார்.

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் பிக் பாஸ் வீட்டில்தான் இருப்போம்..” - எச்சரிக்கும் ஆதித்ய தாக்கரே!

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாஜக அரசியல் சட்டத்தை மாற்றி எழுத விரும்புகிறது. பாஜகவின் ஒரு பகுதியாகவே நம்மை மாற்ற முயற்சிக்கிறது. அதுமட்டுமின்றி பாஜகவினர் நமது வீட்டிற்குள் நுழைந்து நாம் என்ன சாப்பிட வேண்டும்? என்ன உடை அணிய வேண்டும்? என்றும் கட்டளையிட விரும்புகிறது. ஒருவேளை இந்த முறையும் பாஜக வெற்றி பெற்றால், நமது நாட்டின் ஒவ்வொரு சாமானிய குடிமகனின் வீட்டிலும் நுழைந்து கண்காணிப்பார்கள். நாம் பிக் பாஸ் வீட்டில்தான் வசிக்க நேரிடும்.

பாஜக ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மகாராஷ்டிராவில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (Maharashtra Navnirman Sena) கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. உத்தர பிரதேச, பீஹாரை சேர்ந்த பாஜகவுக்கு வாக்களிக்க நினைக்கும் மக்களே, நீங்கள் வாக்களிக்கும் முன்பு ஒன்றை மறக்க வேண்டாம்.

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் பிக் பாஸ் வீட்டில்தான் இருப்போம்..” - எச்சரிக்கும் ஆதித்ய தாக்கரே!

புலம்பெயர் தொழிலாளிகளான உங்களை (உ.பி., பீகார் மக்கள்) மும்பையில் இருந்து விரட்டியடித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. சமண சமயத்தை சார்ந்த மக்களே, உங்கள் புனித தளத்தின் வாசலில் அசைவ உணவுகளை தொங்கவிட்டு போராட்டம் நடத்திய கட்சியோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது. இவயை மறக்க வேண்டாம்.

ஏனெனில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது போன்ற நிகழ்வுகள் மேலும் தலைவிரித்தாடும். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளை கூறி பாஜகவால் வாக்கு கூட கேட்க முடியவில்லை. அவையில்லை என்பதால்தான் மதங்களை வைத்து மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்து வாக்கு சேகரிக்கிறது." என்றார்.

banner

Related Stories

Related Stories