தேர்தல் 2024

இதை செய்ய மோடிக்கு தைரியம் இருக்கிறதா? : சவால் விட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே!

அரசியல் சாசனத்தை மாற்றப் போவதாக சொன்ன பா.ஜ.க தலைவர்களை கட்சியில் இருந்து நீக்க மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என மல்லிகார்ஜூன கார்கே சவால் விடுத்துள்ளார்.

இதை செய்ய மோடிக்கு தைரியம் இருக்கிறதா? : சவால் விட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் தேர்தல் பத்திரம் வரை மக்களுக்கு விரோதமாகவும் அரசியல் சாசனத்திற்கு எதிராகவுமே ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் இருந்து வருகிறது.

அதேபோல் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு உணர்வும் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்கள்மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார் என்றால் அந்த கட்சியில் இருக்கும் மற்றவர்கள் மனங்களை கொஞ்சம் சித்தித்து பாருங்கள்.

அந்த அளவிற்கு பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வை விதைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்தியாவை பாதுகாக்க வேண்டும், அன்பை விதைக்க வேண்டும் என முழக்கத்துடன் இந்தியா கூட்டணி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

மேலும் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்திய அரசியல் சாசனத்தையை மாற்றிவிடுவார்கள் என்பதையும் எச்சரிக்கை செய்து வருகிறது இந்தியா கூட்டணி. அதேபோல் மோடி ஒருபுறம் வெறுப்பை விதைத்து பிரச்சாரம் செய்கிறார். மறுபுறம் நாங்கள் ஏழைகளுக்கான அரசு என்பதுபோல் நாடகம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே "உண்மையிலேயே ஏழைகளை பற்றி கவலைப்படுபவராக மோடி இருந்தால், அவர்களுக்கான சம வாய்ப்புகளையும் சமூகநீதியையும் உருவாக்க விரும்புபவராக இருந்தால், அரசியல் சாசனத்தை மாற்றப் போவதாக சொன்ன பாஜக தலைவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து அவர் நீக்க வேண்டும். அந்த தைரியம் அவருக்கு இருக்கிறதா?" என கேள்வி எழுப்பி சவால் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories