தேர்தல் 2024

இந்து, முஸ்லீம் என பிளவுவாத பேச்சுக்கு வெட்கப்பட வேண்டும்: வெறுப்பை விதைக்கும் மோடியின் தேர்தல் பரப்புரை!

எங்களது தேர்தல் அறிக்கையில் நீதி குறித்த பேச்சுகள் தான் இருக்கிறது. நாங்கள் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, பழங்குடியினருக்கு, தொழிலாளர்களுக்கு நீதியை வழங்குவது பற்றி பேசியுள்ளோம்

இந்து, முஸ்லீம் என பிளவுவாத பேச்சுக்கு வெட்கப்பட வேண்டும்: வெறுப்பை விதைக்கும் மோடியின் தேர்தல் பரப்புரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 19ஆம் தேதி அமைதியான முறையில் தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. இதனையடுத்து 2வது கட்டத்தேர்தல் மொத்தம் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிராக, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட 26 கட்சிகள் இந்தியா கூட்டணி சார்பில் களம் காண்கின்றனர். விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பின்மை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என மோடி ஆட்சியில் நடந்த பல்வேறு அவலங்களை இந்தியா கூட்டணி நாட்டு மக்களிடையே அம்பலப்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையை ஈடுசெய்ய மோடி, இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அவதூைரை பரப்பி வருகிறார். முன்னதாக தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மோடி, திமுக அரசு மீது பல்வேறு அவதூறு குற்றச்சாட்டை கூறினார். குறிப்பாக தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்ததாகவும், அதனை திமுக அரசு முறையாக கையாளவில்லை என்றும் கூறினார். மதுரை எய்ம்ஸ், சென்னை மெட்ரோ 2ம் கட்டப்பணி என மோடி எந்த வித பணிக்கு நிதி ஒதுக்கவில்லை என தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

இந்து, முஸ்லீம் என பிளவுவாத பேச்சுக்கு வெட்கப்பட வேண்டும்: வெறுப்பை விதைக்கும் மோடியின் தேர்தல் பரப்புரை!

தொடர்ந்து தோல்வி பயத்தில் இருக்கும் மோடி, எதிர்க்கட்சிகள் மீது அவதூறை பரப்பியதை தொடர்ந்து பிரிவினை மூலம் ஆட்சியை பிடிக்கலாம் என வெறுப்பு பேச்சை விதைக்க தொடங்கியிருக்கிறார் மோடி. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, காங்கிரஸை கடுமையாக தாக்கிப் பேசுவதுபோல், இஸ்லாமியர்களை குறிவைத்து சாடி பேசியுள்ளார்.

தனது உரையில், அவர்களது அரசு ஆட்சி அமைத்தப்போது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறினார்கள். தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, பின்னர் மன்மோகன் சிங் அரசு சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னதைப்போல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இப்போது சொல்கிறது. அர்பன் நக்சல்கள் உங்களது தாலியை கூட விடமாட்டார்கள் என்று பேசியுள்ளார்.

இந்து, முஸ்லீம் என பிளவுவாத பேச்சுக்கு வெட்கப்பட வேண்டும்: வெறுப்பை விதைக்கும் மோடியின் தேர்தல் பரப்புரை!

மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பர்வன் கோரா வெளியிட்டுள்ள வீடியோவில், எங்கள் தேர்தல் அறிக்கையில் இந்து - முஸ்லிம் என்று எங்காவது இருக்கிறதா? இருந்தால் அதனைக் காட்டுங்கள். நான் சவால் விடுகிறேன்.

நாட்டின் பிரதமர் மீண்டும் மீண்டும் பொய்யை பேசுகிறார். இந்து - முஸ்லீம் பெயரில் பொய் சொல்லி நாட்டை மோடி பிளவுப்படுத்துகிறார். எங்களது தேர்தல் அறிக்கையில் நீதி குறித்த பேச்சுகள் தான் இருக்கிறது. நாங்கள் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, பழங்குடியினருக்கு, தொழிலாளர்களுக்கு நீதியை வழங்குவது பற்றி பேசியுள்ளோம். அதில் பிரதமருக்கு ஆட்சேபனை இருக்கிறது. இப்படி இருக்கையில் இந்து - முஸ்லீம் என நாட்டை பிளவுப்படுத்த மோடி வெட்கபட்ட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories