தேர்தல் 2024

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே விழும் வாக்குகள்: மாதிரி வாக்குப்பதிவில் அம்பலமான தில்லுமுல்லு !

கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்குகள் விழுந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே விழும் வாக்குகள்: மாதிரி வாக்குப்பதிவில் அம்பலமான தில்லுமுல்லு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் நாளை (19.04.2024) தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்காக, மாதிரி வாக்குப்பதிவுகளும் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் நடைபெறும்.

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே விழும் வாக்குகள்: மாதிரி வாக்குப்பதிவில் அம்பலமான தில்லுமுல்லு !

அந்த வகையில் கேரளாவில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அளிக்கப்பட்ட வாக்குகளை சோதனை செய்தபோது, அதில் 4 மின்னணு வாக்குகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே விழும் வாக்குகள்: மாதிரி வாக்குப்பதிவில் அம்பலமான தில்லுமுல்லு !

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடக்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து குற்றம்சாட்டி வந்த நிலையில், அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக மண்ணை கவ்வும் என்று கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தெரிவித்து வரும் நிலையில், இந்த நிகழ்வு பாஜகவின் தில்லு முல்லு வேலையை அம்பலப்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories