தேர்தல் 2024

தட்டிதூக்கும் இந்தியா கூட்டணி - 39 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெல்லும் : ABP- CVoter கருத்துக் கணிப்பு

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என ABP - CVoter கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டிதூக்கும் இந்தியா கூட்டணி - 39 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெல்லும் : ABP- CVoter கருத்துக் கணிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ஆரம்பம் முதலே அத்தனை கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என ABP - CVoter கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABP இணைய செய்தி நிறுவனம் CVoter நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி வெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 167 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தியதில் 97 தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவில் 20 தொகுதிகளும் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் கால்பதிக்க வேண்டும் என பா.ஜ.க. மேற்கொண்டுள்ள முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை என்றும் அந்த கருத்தக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories