தேர்தல் 2024

”வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதது ஏன்?” : பாஜகவுக்கு ராகுல் கேள்வி

பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் ஏன் இடம் பெறவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

”வேலைவாய்ப்பின்மை, 
பணவீக்கம் குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதது ஏன்?” : பாஜகவுக்கு ராகுல் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையானது மக்கள் பிரச்னைகளை குறிப்பிட்டு எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் இதனை ஜூம்லா அறிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருவதோடு, மக்களை மேலும் முட்டாளாக்கும் அறிக்கை என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தியும் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளான பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிய 2 வார்த்தைகள் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. இதிலிருந்தே தெரிகிறது நாட்டின் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க பா.ஜ.க விரும்பவில்லை.

ஆனால் இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் 30 லட்சம் நிரந்தர வேலை வாய்ப்புகள் உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மோடியின் பொய் வார்த்தைகளை நம்பி இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள். இதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வேலைவாய்ப்பில் புரட்சியை ஏற்படுத்துவார்கள்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories