தேர்தல் 2024

“இந்தியாவின் முதல் பிரதமர் யார்?” - அண்ணாமலை முதல் கங்கனா வரை... Confuse ஆன பாஜக வேட்பாளர்கள் !

இந்தியாவின் பிரதமர் குறித்து அண்ணாமலையும், கங்கனாவும் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

“இந்தியாவின் முதல் பிரதமர் யார்?” - அண்ணாமலை முதல் கங்கனா வரை... Confuse ஆன பாஜக வேட்பாளர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, இதுவரை பல முறை, பல விஷயங்களில் உளறியுள்ளார். ஒன்றும் தெரியாமல், தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பேசி வந்துள்ளார். இதனாலே அவரை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், "பாஜகவினர் கதர் ஆடைகள் உடுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்" என்றுள்ளார். இதையடுத்து பிரதமர் யார் என்று தெரியாமல் இவர் எப்படி ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியானார் என்று கிண்டலடித்து வருகின்றனர். இவர் ஒரு புறம் இருக்க, மறுபுறம் பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா, இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறியுள்ளார்.

“இந்தியாவின் முதல் பிரதமர் யார்?” - அண்ணாமலை முதல் கங்கனா வரை... Confuse ஆன பாஜக வேட்பாளர்கள் !

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத், மத்திய பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனியார் ஆங்கில தொலைக்காட்சியில் விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது நெறியாளர் கேள்வி கேட்க, அதற்கு இவர் பதிலளித்தார்.

அந்த சமயத்தில் மோடி குறித்து நெறியாளர் கேள்வி கேட்க முனைகையில், அதனை நிறுத்தி, இவர் தொடர்ந்து பேசினார். அப்போது, நமது நாட்டின் "முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் இப்போது என்ன ஆனார்?" என்று கேட்கவே, முதல் பிரதமர் அவரில்லை என்று நெறியாளர் கூறினார். இதையடுத்து சற்று தடுமாறி, அதன்பிறகு தனது பேச்சால் சமாளிக்க முயன்றார் கங்கனா.

“இந்தியாவின் முதல் பிரதமர் யார்?” - அண்ணாமலை முதல் கங்கனா வரை... Confuse ஆன பாஜக வேட்பாளர்கள் !

இந்த நிலையில், முதல் பிரதமர் என்று பேசிய பாஜக வேட்பாளர் கங்கனாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவருக்கு மட்டுமில்லை பாஜகவினருக்கே பொது அறிவு இல்லை என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். வடக்கே கங்கனா, தெற்கே அண்ணாமலை... 2 பாஜக வேட்பாளர்கள் பிரதமர் யார் என்றே தெரியாமல் இருந்து வருகின்றனர்.

இந்தியாவின் முதல் பிரதமர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜவர்ஹலால் நேரு ஆவார். இதுவரை சுபாஷ் சந்திர போஸும், மகாத்மா காந்தியும் பிரதமராக ஆனதில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக சுதந்திரத்திற்கு முன்பே போஸ் இறந்துவிட்டார். சுதந்திரம் கிடைத்தது 15 ஆகஸ்ட் 1947, போஸ் இறந்தாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் 18 ஆகஸ்ட் 1945 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories